இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கேள்விகளுடன் அரசு வழக்கறிஞரின் சொந்த மனு விசாரணை 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பிடிஐ

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிறப்பு அரசு வழக்கறிஞர் குரோவர் மேற்கொண்ட மனு மீது உச்ச நீதிமன்ற அமர்வு ஏகப்பட்ட கேள்விகளைத் தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தினால் சிபிஐ சார்பாக வாதாட நியமிக்கபட்ட சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்தும், முடக்கப்பட்ட சொத்துகள் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் தொடர்ந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வின் முன் வந்த போது, “இந்தப் பணம் (ரூ.742.58 கோடி) நிதிமுறைகேடு என்று கருதப்பட்டது, ஆனால் குற்ற நடைமுறைகளுக்குள் வரவில்லை என்று தெரிகிறது என்பது எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய தர்க்கம்தானே” என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் குரோவர், சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் முறையான மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கு முன் இடைப்பட்ட காலத்திற்கான மனுவே தன்னுடையது என்று கூற அதற்கு அமர்வு, “சிறப்பு நீதிமன்ற உத்தரவின் படி இந்தப் பணம் ‘குற்றத்தின் பகுதியல்ல’ எனவே ”நிதிமுறைகேடு அல்ல” என்று மேற்கோள் காட்டியது.

இதனையடுத்து ஆனந்த் குரோவர் தன்னுடைய வழக்கை நன்றாகத் தயாரித்துக் கொண்டு புதன் கிழமை (8ம்தேதி) வாதங்களை முன்வைக்குமாறு கூறியது.

அமலாக்கப்பிரிவினர் ஆலோசனை மற்றும் அனுமதிக்குப் பிறகு முறையான மனுவை மேற்கொள்வர், ஆனால் பிணைபத்திரங்கள் அளிக்கக் கூடாது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படக்கூடாது என்ற அவசரக் கோரிக்கைக்காகவே தான் மனு செய்ததாகவும் ஆனந்த் குரோவர் தெரிவித்தார்.

மேலும் சிபிஐ-யும் கலந்தாலோசித்து இந்த வழக்கை மேலும் கொண்டு செல்ல வரைவு தயாரித்து சட்ட அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் பெற்று வழக்கு தொடரும் என்றார் ஆனந்த் குரோவர்

பிறகு ஏன் நீங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர், அதற்கு, 2ஜி வழக்கில் இறுதி உத்தரவு வந்த பிறகே வாதிபிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்ற முந்திய உத்தரவுகள் உள்ளன என்று ஆனந்த் குரோவர் சுட்டிக்காட்டினார். மேலும் தற்போதைய சிறப்பு நீதிமன்ற உத்தரவு இறுதி உத்தரவாக கருதப்பட வேண்டிய தேவையில்லை என்றார் ஆனந்த் குரோவர்.

இதற்கு, “நாங்கள் உங்கள் கருத்தை ஏற்கவில்லை, இதுதான் இறுதி உத்தரவு, விசாரணை முடிந்தது என்று கூற முடியும்” என்றனர்.

இந்நிலையில் குரோவரின் உதவிக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வந்தார், 2ஜி வழக்குகளில் சீராய்வு மனுக்கள் முன்பு உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள சந்தர்பங்களை அறிவுறுத்தினார்.

மேலும் பூஷன் கூறும்போது, மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்யாவிட்டாலும்கூட என்ஜிஓ பூஷன் இதனை மேற்கொள்ளும் என்றார்.

இதனையடுத்து, சிறப்பு சிபிஐ அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் புதிய மனுவை, அதாவது எந்த ஒரு ஆட்சேபணைகளும், குறுக்கீடுகளும் எழாத, புதிய மனுவை நாளையே மேற்கொள்ள உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT