இந்தியா

ஹைதராபாத்தில் 897 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 7 மாதங்களில் 21 பேர் பலி

என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநில தலைநக ரான ஹைதராபாத்தில் 897 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 மாதங்களில் பன்றிக் காய்ச் சலுக்கு 21 பேர் பலியாகி உள்ள தும் தெரியவந்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் பொதுவாக குளிர் காலத்தில் அதிகமாக பரவும். இப்போது கோடைகாலம் தொடங்கிய போதிலும் ஹைதராபாத் நகரில் பன்றிக் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரை இந்நோய்க்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தெலங்கானா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இப்போது 6,667 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், 897 பேருக்கு இந்நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதில் கடந்த புதன்கிழமை மட்டும் 187 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT