இந்தியா

குஜராத்தில் மேலும் தீவிரமடைந்துள்ள ரேன்சம்வேர் தாக்குதல்

செய்திப்பிரிவு

குஜராத் மாநில அரசு நிறுவியுள்ள மாநில அளவிலான கணினி வலைப்பின்னலையே அனைத்து அரசுத் துறைகளும் பயன்படுத்த வேண்டுமென குஜராத் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குஜராத் அரசுத்துறை கணினிகளின் மீது திங்கள் அன்று தொடங்கிய ரேன்சம்வேர் இணையதளத் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

நிதி தொடர்பான கணினிப் பிரிவுகளின்மீது தாக்குதல்கள் தொடர்வதால், இரண்டாவது நாளாக குஜராத் அரசின் கீழ் இயங்கும் நெட்வொர்க்குகளில் வைரஸ் பரவிவருகிறது. இதனால் பல மாவட்ட அலுவலகங்களில் இயங்கும் கம்யூட்டர்களிலும் கணினி வைரஸ் பரவி வருகிறது.

வைரஸ் பரவல்

கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, பல்வேறு துறைகள் மற்றும் முகமைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர காந்தி நகர் மற்றும் கோத்ரா உள்ள காவல் நிலையங்கள், ஊழல் தடுப்பு துறைகள், மாவட்ட ஆட்சியர், பதிவாளர் அலுவலகங்கள், மண்டல போக்குவரத்துத் துறைகள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அரசாங்கம், மாநில அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப வலைப்பின்னலின் அமைப்பான GSWAN (குஜராத் மாநில கணினி நெட்வொர்க்) மட்டுமே பயன்படுத்தவேண்டுமென அனைத்துத் துறைகள் மற்றும் முகமைகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை, குஜராத் தலைமைச் செயலகத்தில், கணினிகள் மீது இணையத் தாக்குதல் பற்றி குஜராத் மாநில அரசின் பல்வேறு துறைகளிலிருந்தும் முகமைகளிலிருந்தும் 137 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

மாநில ஐடி பிரிவு தடுப்பு நடவடிக்கை

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணினிகள் மற்றும் ஐடி நெட்வொர்க்குகள் உடனே ஸ்விட்ச் ஆப் செய்யத்தக்க வகையிலான ஓர் எச்சரிக்கையை அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த கணினித் தொடர்புகளிலும் அனைத்து டிஜிட்டல் வலைப்பின்னல்களிலும் வைரஸ் தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாநில குற்றப் பதிவுத்துறை (SCRB), உரிய நிபுணர்களின் ஆலோசனைகளின்பேரில் அனைத்துத் துறைகள் மற்றும் முகமைகளுக்கு கணினியை பயன்படுத்தும்முன் அதன் செயல்பாட்டை உயர்த்தும்விதமாக பாதுகாப்பு இணைப்புகளைப் பொருத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தனியார் நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதல்

இதற்கிடையில் மாநிலத்தில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் தங்கள் நெட்வொர்க்கில் இணைய ஊடுருவல் நடந்துள்ளதாக அறிவிக்கவில்லை. புகார்களும் கொடுக்கவில்லை.

எனினும், தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் புகார் தெரிவிப்பதை தவிர்த்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக இணையதள தாக்குதலைத் தடுக்கும்விதமாக தங்கள் நெட்வொர்க்குகளை மேம்படுத்திவருவதாக இணையதள தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், தனியார் நிறுவனங்கள் புகார் அறிக்கைகளைத் தவிர்த்துவிட்டதாக சைபர் நிபுணர்கள் தெரிவித்தனர் அதற்கு பதிலாக அவர்கள் இணைய பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க தங்கள் நெட்வொர்க்குகள் மேம்படுத்திவருகிறார்கள்.

குற்றப்பிரிவு எச்சரிக்கை

இதற்கிடையில், அஹமதாபாத் காவல்துறை தமது இணைய வலைப்பின்னல்களோடு வைரஸ் தடுப்பு மென்பொருள் ஒன்றை பொருத்தி தங்களது அனைத்து புள்ளிவிவரங்களையும் கணினிளையும் பாதுகாத்துக் கொண்டது.

பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி பாதுகாப்புகளில் பொதுமக்கள் தங்கள் கணினிகளில் ஏதாவது இணையதள ஊடுருவல்கள் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஊடுருவல்மூலம் இணையதள வலைப்பின்னல்களைச் சேதமடையச் செய்யமுடியும். தவிர, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளை ஊடுருவி அதில் குழப்பங்கள் ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது தவிர, மற்ற சில மாநிலங்களிலும், குறிப்பாக, ஆந்திர, மகாராஷ்டிரா காவல்துறைகளிலும் கேரள மாநில வயநாடு மாவட்ட கிராமங்களிலும் இணையதள தாக்குதல் நடந்ததால் பணிகள் முடங்கியுள்ளன.

SCROLL FOR NEXT