இந்தியா

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா

இரா.வினோத்

காங்கிரஸ் மூத்த தலை வரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான‌ எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந் திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்குகிறார். கடந்த 1968-ம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யான இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 1999-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து 2004 - 08 காலக்கட்டத்தில் மஹாராஷ்டிர ஆளுநரா கவும் பணியாற்றினார்.

மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். கடந்த 2013-ல் கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியபோது எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் இருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலி டம் சித்தராமையாவை முதல்வராக அறிவித்தது. ஆட்சிக்கு வந்த சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணா, ஜாபர் ஷெரீப் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.எம்.கிருஷ்ணா, அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் சோனியா காந்திக்கு எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவு எடுத்

துள்ளதாகவும், எனவே தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT