இந்தியா

நம்பகத்தன்மை அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்: ஆளுநரிடம் பாஜக வேண்டுகோள்

செய்திப்பிரிவு

நம்பகத்தன்மை அடிப்படையில் புதிய அரசு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சி யின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் சசிகலா உள்ளார். ஆனால் மக்களிடம் அவருக்கு செல்வாக்கு இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக மாற்று நபரை முதல்வராக்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதன்மூலம் மக்களின் நம்பிக் கையைப் பெற முடியாது.

இந்தநேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட வேண்டும். பெரும்பான்மையை மட்டுமே கருத்திற் கொள்ளாமல் நம்பகத்தன்மை அடிப்படையிலும் புதிய அரசு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். மாநிலத்தில் நிலை யான ஆட்சியை தரக்கூடியவர் யார் என்பது குறித்து கணித்து அவர் செயல்பட வேண்டும். புதிய அரசு ஊழலற்ற, திறமையான அரசாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT