இந்தியா

கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை

செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில், ‘பாதுகாப் பான பயணம் உயிரைக்காக்கும்’ என்ற பிரச்சாரத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்நிலையில், கொல்கத்தா மாநகர காவல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தாவில் சமீப கால மாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல் வோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விபத்து மரணங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, இவ்வாறு செல்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கொல்கத்தா மாநகர எல்லைக் குள் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகள், இருசக்கர வாகனங் களை ஓட்டி வருபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவர் களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT