இந்தியா

பீகாரில் சிஆர்பிஎப் காவலருக்கு கீர்த்தி சக்ரா விருது

செய்திப்பிரிவு

பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான சண்டையில் தீரமுடன் செயல்பட்ட மத்திய ரிவர்ச் போலீஸ் படை (சிஆர்பிஎப்) காவலர் பிரிகு நந்தன் சௌத்ரிக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதை முன் முதலில் பெறும் சி.ஆர்.பி.எப். வீரர் மற்றும் விருது பெற்ற ஒரே சி.ஆர்.பி.எப். வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பீகார் மாநிலத்தின் சக்ரபந்தா வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சி.ஆப்.பி.எப்.-ன் கோப்ரா படைப்பிரிவு ஈடுபட்டிருந்தது. இதில் கோப்ரா வீரர் பிரிகு நந்தன் சௌத்ரிக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும், அவர் மாவோயிஸ்களை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி, தனது சகாக்களை காப்பாற்றியுள்ளார்.

மேலும் ஆயுதப் படையின் ஆயுதங்களை மாவோயிஸ்ட்கள் கைப்பற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். அவரது வீரச் செயலை பாராட்டி ஆயூதப்படைக்கான நாட்டின் 2-வது மிகப்பெரிய விருதான கீர்த்தி சக்ரா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேதார்நாத் மழை, வெள்ளத்தின்போது, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப் படை பைலட் டி.கேஸ்டிலினோவுடன் பிரிகு நந்தன் இவ்விருதை பகிர்ந்து கொள்கிறார்.

போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் சி.ஆர்.பி.எப். அதிகபட்சம் 15 விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் 7 பேருக்கு, அவர்களின் வீர மரணத்துக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.

2012-ல் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்ற என்எஸ்சிஎன் (ஐ.எம்) தீவிரவாதிகளை எதிர்த்து வீரமுடன் போரிட்ட சிஆர்பிஎப் காவலர்கள் உக்ரசேன் திரிபாதி, அலி ஹசன் ஆகியோர் குடியரசுத் தலைவரின் காவலர் விருதைப் பெற்றுள்ளனர். இதில் திரிபாதிக்கு அவரது மறைவுக்குப் பின் விருது வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT