இம்பால்: மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் 10 பேர் பலியாகினர், மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலை 39-ல் மகன், சகுமாய் இடையே இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டது.
இம்பால் நோக்கி வந்து கொண்டிருந்த இந்தப் பேருந்து மலைப்பாதையில் கிடுகிடு பள்ளத்தில் விழுந்தது. விபத்துக்கான உடனடி காரணம் தெரியவில்லை. காயமடைந்த 25 பேர் அசாம் ரைஃபிள்ஸ் மாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 25 பேரில் பலர் ஆபத்து நிலையைக் கடக்கவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.