வரும் மார்ச் மாதம் ஜெனீவா வில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஒருவர் பங்கேற்க, ’கோ ஜெனீவா’ எனும் பெயரில் பன்னாட்டு சமூகநல அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா வாய்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வா ஜி.அனந்தபத்ம நாபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, அந்த அமைப்பு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இதற்கான தேர்வு பிப்ரவரி 24-ல் தொடங்கி மார்ச் 2-ம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும். இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கான தகுதிபெற18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மனித உரிமைகள் பற்றி, குறிப்பாக இலங்கை பிரச்சினை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த அமைப்பின் நோக்கத்துக்கு ஆதரவானவராக இருக்கவேண்டும்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 092465 81113 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
இவர்களில் 50 பேர் தேர்ந் தெடுத்து, அவர்களில் ஒருவரை நேர்முகத் தேர்வு மூலம் இறுதி செய்து ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.