கர்நாடகாவில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சி களுக்கு தற்போது உள்ள எம்எல்ஏக் களின் எண்ணிக்கையில் காங்கிரஸ் 2 பேரையும், பாஜக, மஜத ஆகியவை தலா ஒருவரையும் தேர்வு செய்ய முடியும். ஆனால் மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் 5 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேரின் வாக்குகளை நம்பி கூடுதலாக ஒரு வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இதே போல பாஜகவும் கூடுதலாக ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்துள்ளது.
இதனால் முதல்வர் சித்த ராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஜத தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா ஆகியோர் தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக வியூகம் அமைத்துள்ளனர். அதன் படி சித்தராமையா மஜத அதிருப்தி எம்எல்ஏக்களுடனும், மற்ற உறுப்பினர்களுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின் றார். இதே போல எடியூரப்பாவும், தேவகவுடாவும் மற்ற கட்சி உறுப் பினர்களுக்கு வலைவீசி வருகின்ற னர். இதனால் சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சை உறுப்பினர்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் பேரம் தொடர்பாக தனி யார் தொலைக்காட்சி ஒன்று ஆடியோ, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில் மஜத சார்பாக பசவ கல்யாண் தொகுதி யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன குபா மற்றும் சாமுண்டீஸ்வரி தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.டி.தேவகவுடா ஆகிய இருவரும் சிக்கியுள்ளனர். இவர்கள் இரு வரும் கர்நாடக ஜனதா கட்சி யின் பி.ஆர்.பாட்டீல் மற்றும் கோலார் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பி னர் வர்தூர் பிரகாஷூடன் சேர்ந்து மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க பேரம் பேசுகின்றனர்.
நால்வரும் தாங்கள் சட்டப் பேரவை தேர்தலில் செலவு செய்த தொகையை தருபவருக்கு மட்டுமே வாக்களிப்போம். குறைந்தபட்சம் ரூ.5 கோடி தர வேண்டும் எனவும் பேசியிருப்பது பதிவாகியுள்ளது. மேலும் ஜி.டி.தேவகவுடாவின் உதவியாளர் ரூ.10 கோடி வரை பேரம் பேசிக்கொண்டிருப் பதாகவும் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதே போல பீதர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசோக் கெனி, மஜத வேட்பாளர் என்னிடம் ரூ.7 கோடி தருவதாக கூறியுள்ளார். பல எம்எல்ஏக்களிடமும் இதே போல பேசியுள்ளார் என பேசுவது பதிவாகியுள்ளது.