பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிறுவனர் லேக்ராஜ் கிருபாலினியின் 48-வது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:
என்னுடைய சிறுவயதில் சிந்து மாகாண ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினேன். கராச்சி, சிந்து மாகாணம் தற்போது இந்தியாவின் பகுதி இல்லை என்பதை நினைக்கும் என்னையறியாமல் சோகம் சூழ்ந்து கொள்கிறது. என்னைப் பொறுத்தவரை சிந்து மாகாணம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது.
பிரம்ம குமாரிகள் அமைப்பில் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். அந்த அமைப்பில் அதிக அளவில் இணைகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இளைஞர்கள் மட்டுமே அதிக அளவில் இணைகின்றனர். பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. வருங்காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.