இந்தியா

148 இந்திய தடகள வீரர்கள் பத்திரமாக உள்ளனர்: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

பிடிஐ

சர்வதேச பள்ளிகள் விளை யாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக துருக்கி சென்ற 148 இந்திய தடகள வீரர்கள் மற்றும் 38 அதிகாரிகள் பத்திர மாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “துருக்கியின் டிரப் சான் நகரில் நடைபெறும் விளை யாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்ற 148 மாணவர்கள் மற்றும் 38 அதிகாரிகள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் நாளை முதல் பகுதி பகுதியாக நாடு திரும்ப உள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பெங்களூருவில் கூறும்போது, “துருக்கி சென் றுள்ள மாணவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது” என்றார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறும்போது, “துருக்கியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டு வருகிறோம். அங்கு நிலைமை சீராகும் வரை இந்தியர்கள் அனைவரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. துருக்கி யில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வும் வன்முறையை தவிர்க்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

அங்கு வசிக்கும் இந்தியர் களுக்கு உதவும் வகையில் அவசரகால தொலைபேசி எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்காரா: +905303142203, இஸ்தான்புல் : +905305671095.

SCROLL FOR NEXT