இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி, நஜீப் ரசாக் முன்னிலையில் இந்தியா-மலேசியா 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

செய்திப்பிரிவு

டெல்லி வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்த 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அரசு முறை பயணமாக கடந்த 30-ம் தேதி நஜீப் இந்தியா வந்தார். சென்னையில் தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்தை அவர் சந்தித்துப் பேசினார்.

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு நேற்று சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக் கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜி, துணை குடி யரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலையில் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது ரூ.34,347 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. மேலும் தீவிரவா தத்தை ஒழிப்பதில் இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதி மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT