ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில், நவ்ஷேரா பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சந்தேகத்துக்கு இட மான வகையில் ஒரு சிறுவன் நடமாடி யதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
கடும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த சிறுவன் சரணடைந்தான். விசார ணையில் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் உள்ள டங்கர் பெல் கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதும், அவனது பெயர் அஷ்பக் அலி சவுஹான் என்பதும் தெரியவந்தது.
எல்லை கட்டுப் பாட்டு கோடு அருகே இந்தி யாவுக்குள் ஊடுருவும் வழியை தெரிந்து கொள்வதற்காக அந்த சிறுவனை தீவிரவாதிகள் அனுப்பி வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேற் கொண்டு விசாரணை நடத்தி உண் மையை தெரிந்து கொள்வதற்காக அந்த சிறுவனை பாதுகாப்புப் படையினர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.