டெல்லியைச் சேர்ந்த அறிவுஜீவிகள் அமைப்பான ஏடிஆர், 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 620 அமைச்சர்களில் 609 பேரின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.
அவர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் உள்ள தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 609 அமைச்சர்களில் 462 பேர் (76 சதவீதம்) கோடீஸ்வரர்கள். 609 அமைச்சர்களில் 51 பேர் பெண்கள்.
அதிக அளவு பெண் அமைச்சர்களுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் விபரம் வருமாறு: