இந்தியா

யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: ராஜபக்சேவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்தல்

பிரவீன் சுவாமி

யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவத்தை விலக்கிக ்கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற பிராந்திய அளவிலான மாநாட்டில் பங்கேற்ற மன் மோகன்சிங், அங்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக புது டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக மன்மோகன்சிங்கை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி ைவக்கப்பட்டுள்ள ராணு வத்தை இலங்கை அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதி காரத்தை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் நாடாளு மன்றத்துடன் இணைந்து செயல்பட இந்தியா அறிவுறுத்த வேண்டும் என்று மன் மோகன் சிங்கிடம் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்” என்றார் குர்ஷித்.

2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக் களித்தது. இந்த நிகழ்வுக்குப் பின்பு இரு நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

போரின்போது யாழ்ப் பாணம் உள்ளிட்ட வட பகுதியில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து வருகிறது.

கண்ணிவெடிகளை அகற்றுதல், மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தபின்பு மேலும் நூற்றுக் கணக்கான வீரர்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது.

SCROLL FOR NEXT