இந்தியா

2016-ம் ஆண்டிலும் அதிகமானோர் பயன்படுத்திய பாஸ்வேர்ட் ‘123456’

பிடிஐ

கடந்த 2016-ம் ஆண்டிலும் ‘123456’ என்ற கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) அதிகமானோர் பயன்படுத்தி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ் வேர்ட் மேனேஜ்மென்ட் நிறு வனம் ‘கீப்பர் செக்யூரிட்டி’. இந் நிறுவனம் கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் ஊடுருவலைத் தடுக்க வும், பாஸ்வேர்ட்களை பாதுகாக்க வும் பிரத்யேக சாப்ட்வேர்களை வாடிக்கையாளர்கள், நிறுவனங் களின் தேவைக்கேற்ப வழங்கி வருகிறது. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேற்பட்ட செக்யூரிட்டி கோட்களை ஆய்வு செய்தோம். அதில் 10 பாஸ்வேர்ட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற் றில் ‘123456’ என்ற பாஸ்வேர்ட்டை தான் கடந்த 2016-ம் ஆண்டில் மீண்டும் அதிகமானோர் பயன் படுத்தி உள்ளனர்.

அதற்கடுத்த நிலையில், ‘123456789’, ‘qwerty’ ஆகிய பாஸ் வேர்ட்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 10 இடங்களைப் பிடித்த பாஸ்வேர்ட்களில் 6 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவான எழுத்துகளைக் கொண்ட பாஸ் வேட்கள் 4 இடம்பெற்றுள்ளன.

தவிர முதல் 10 இடங்களில் ‘12345678’, ‘111111’, ‘1234567890’, ‘1234567’, ‘123123’, ‘987654321’ ஆகிய எண்களையும் பாஸ்வேர்ட் டாக அதிகமானோர் பயன்படுத்தி உள்ளனர். அத்துடன் ‘password’ என்ற ஆங்கில சொல்லையே பலர் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளது.

பாஸ்வேர்ட்களை எப்படி எல்லாம் ஊடுருவிக் கண்டுபிடிக் கிறார்கள், பயன்படுத்துவோரின் அலட்சியம் போன்ற தகவல்களை யும் வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT