இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் ஐஏஎஸ் நியமனம்

செய்திப்பிரிவு

திருமலை திருப்பதி தேவஸ்தானத் தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்து வந்தவர் சாம்பசிவ ராவ். இவர் ஆந்திர மாநில வருவாய் துறை முதன்மை செயலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சாம்பசிவ ராவ் தலைமையில் நேற்று திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய சாம்பசிவ ராவ், கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருவதால், லட்டு பிரசாத விநியோக மையங்களின் எண் ணிக்கையைஅதிகப்படுத்தும்படி உத்தரவிட்டார். இது தவிர பக்தர் கள் வசதிக்காக தற்போது நடந்து வரும் பல்வேறு பணிகளையும் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.

சாம்பசிவ ராவ் தனது பதவி காலத்தில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அமல் படுத்தினார். குறிப்பாக கூட்ட நெரிசலை தவிர்க்க 3 வரிசை, மொபைல் செயலி, ரூ.300 தரிசன டிக்கெட் ஆகியவற்றை செயல்படுத்தினார்.

SCROLL FOR NEXT