இந்தியா

அமைச்சர் ஆபாச பேச்சு விவகாரம்: தொலைக்காட்சி சிஇஓ உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்கு

செய்திப்பிரிவு

ஆபாச பேச்சு விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்த கேரள அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தனியார் தொலைக்காட்சியின் ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி யிருப்பது போலீஸ் விசாரணை யில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியில் உள்ளது. அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சசீந்திரன், பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிய ஆடியோ டேப் அண்மையில் தொலைக்காட்சி, இணையதளங்களில் வெளியா னது. இந்த விவகாரத்தால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கேரள தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலையாள தனியார் செய்தி சேனல் ஒன்று ரகசிய ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியுள்ளது. அதன்படி அந்த தொலைக்காட்சி யின் பெண் ஊழியர், அமைச்ச ருடன் பேசியுள்ளார். இதில்தான் ஏ.கே.சசீந்திரன் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதிய அமைச்சர் தாமஸ்

பதவி விலகிய ஏ.கே.சசீந்திரன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டி இன்று போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப் பேற்கிறார்.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாமஸ் சாண்டியை அமைச்சராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT