இந்தியா

60 வயதுக்கு மேல் பாஸ்போர்ட் கட்டணம் குறைப்பு

பிடிஐ

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப் பிப்பவர்களில் 8 வயதுக்குக் கீழும், 60 வயதைத் தாண்டிய வர்களுக்கும் 10 சதவீதம் கட்டண குறைப்பு செய்யப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறியதாவது:

தத்கால் முறையில் பாஸ் போர்ட் பெறுவதற்கு விண்ணப் பிப்போர் அதற்கு ஆதாரமாக ரேஷன் அட்டையை தாக்கல் செய்யலாம். கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் பான் அட்டை இல்லாதவர்களுக்கு வசதியாக ரேஷன் அட்டையை அனுமதிப் பது உதவியாக இருக்கும்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு 8 வயதுக்கு கீழே உள்ளவர்களும், 60 வயதைத் தாண்டியவர்களும் விண்ணப்பித்தால் அவர் களுக்கு 10 சதவீத கட்டணக் குறைப்பு சலுகை தரப்படும். இது 24-ம் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வரும்.

தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே பாஸ்போர்ட்டில் சொந்த விவரங்கள் அச்சிடப்படு கின்றன. இதுபற்றி பலர் புகார் தெரிவிப்பதால் ஆங்கிலம், இந்தியில் சொந்த விவரங்கள் அச்சிடப்படும். அரபு நாடுகளில் அரபிய மொழியிலும் ஜெர்மனி யில் ஜெர்மன் மொழியிலும் ரஷ்யாவில் ரஷ்ய மொழியி லும் பாஸ்போர்ட் அச்சிடப்படு கிறது. பாஸ்போர்ட் அச்சடிக்க நாசிக் பிரஸ்ஸுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். அந்த பாஸ்போர்ட்களில் இந்தி மொழியும் இடம்பெறும்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT