இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு விவகாரம்: தேர்தல் ஆணையரிடம் ஆம் ஆத்மி புகார்

பிடிஐ

சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த பஞ்சாபில், வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாது காப்பு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியை சந்தித்து புகார் அளித்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது:

தேர்தல் அதிகாரி மற்றும் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்குள் சென்று வந்தனர். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்து புகார் அளித்துள்ளோம்.

குறிப்பாக, தேர்தலுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக 2015-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் ஆணையம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில் கூறி யிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளோம்.

அதாவது பாட்டியாலாவில் பாதுகாப்பான அறையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இது விதிமுறைகளுக்கு புறம் பானது என்றும் புகாரில் குறிப் பிட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத் துள்ளோம் என்றார். பஞ்சாபில் கடந்த 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

SCROLL FOR NEXT