இந்தியா

மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து இரோம் சர்மிளா வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து இரும்பு பெண்மணியான இரோம் சர்மிளா தவுபால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவர் இரோம் சர்மிளா. கடைசியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியலில் நுழைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடிவெடுத்தார்.

அதன்படி மணிப்பூரில் நடக்க வுள்ள தேர்தலில் போட்டியிடு வதற்காக மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய இரோம் சர்மிளா, தவுபால் தொகுதியில் முதல் வரும், காங்கிரஸ் தலைவருமான இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறி வித்திருந்தார். இந்நிலையில் நேற்று இம்பாலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தவுபால் தொகுதிக்கு சைக் கிளில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அப்போது அவரது ஆதர வாளர்களும் உடனிருந்தனர். மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் மார்ச், 4 மற்றும் 8-ம் தேதி என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பின் திருமணம்

தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று இரோம் சர்மிளா தெரி வித்தார்.

SCROLL FOR NEXT