இந்தியா

பாகிஸ்தான் என்னைக் கைது செய்த பிறகு மரணம் வேண்டி பிரார்த்தனை செய்தேன்: இந்திய ராணுவ வீரர்

பிடிஐ

4 மாதங்கள் சிறைப்பிடிப்புக்குப் பிறகு பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான், தான் கொடூர சித்ரவதைக்கு ஆளாகும் போதெல்லாம் மரணம் வேண்டி பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

சந்துபாபுலால் சவான் கடந்த ஜனவரியில் விடுவிக்கப்பட்டார்.

“என்னைக் கடுமையாகச் சித்ரவதை செய்தனர். நான் அவர்களிடம் என்னை கொன்று விடுங்கள் என்று மன்றாடினேன். என் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டதாகவே நான் கருதினேன்” என்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு வெள்ளிக்கிழமை மராத்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

22 வயது சந்துபாபுலால் சவான் செப்டம்பர் 29-ம் தேதி பாகிஸ்தான் எல்லையைக் கடந்தார். அன்றைய தினத்தில்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பாடுகளை அழித்தது. அதாவது உரி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் பலியானதற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றது.

பாகிஸ்தான் ராணுவம் தன்னைப் பிடித்த பிறகு என்ன செய்தார்கள் என்று சவான் கூறும்போது, “என்னை சோதனையிட்டனர், என்னுடைய உடைகளை எடுத்தனர். கருப்பு ஆடையை எனக்கு அளித்தனர். ஒரு வாகனத்தில் என்னை அழைத்துச் சென்றனர்.

என்னைக் கொன்று விடுங்கள் என்று நான் என் தலையில் அடித்துக் கொண்டு கதறும் போதெல்லாம் ஊசி மருந்தை செலுத்துவார்கள். என்னை அடித்து உதைத்தனர். ஒரே நேரத்தில் என் கண்களில் கண்ணீர் முழுதும் வற்றி விட்டது. பகலா இரவா என்பது எனக்குப் புரியாத ஒருநாளில் என் வாழ்க்கையை முடித்து விடுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்” என்றார் உருக்கத்துடன் ராணுவ வீரர் சந்துபாபுலால் சவான்.

SCROLL FOR NEXT