இந்தியா

காங்கிரஸை விட மோசம்: பாஜக மீது சிவசேனா புகார்

செய்திப்பிரிவு

சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி யின்போது இருந்ததைவிட நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. அங்கு பாகிஸ் தான் ஆதரவு கோஷம் எழுப்பப் படுவதுடன் அந்நாட்டு கொடியும் ஏற்றப்படுகிறது. எனவே, காஷ்மீர் மாநில அரசைக் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுத் தள்ளி யது போல, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மத்திய அரசுக்கு (மோடி) துணிச்சல் இல்லாவிட்டால், சர்வதேச அளவில் நாட்டின் செல்வாக்கை அதிகரிப்பதில் பயன் இல்லை. இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT