இந்தியா

இந்தியா - சீனா இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது: சீன அதிபர் பேச்சு

செய்திப்பிரிவு

இந்தியா - சீனா இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது, அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சீனப் பிரதமரை வரவேற்றனர்.

முன்னதாக, முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை சீன அதிபர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர், "இந்தியா - சீனா இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். சீன அதிபராக இந்தியாவுக்கு முதல் முறையாக நான் வந்துள்ளேன். முதல் பயணம் வெற்றிகரமாக அமையும் என நான் நம்புகிறேன்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று அவர் சந்தித்து பேசுகிறார். வர்த்தகம், பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT