இந்தியா

விமான பணிப்பெண் வேலை தரமறுத்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சுவாரஸ்ய தகவல்

பிடிஐ

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான பணிப்பெண் வேலைக்கான தனது விண்ணப்பத்தை நிராகரித்த சம்பவம் பற்றிய தகவலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி (40) சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவருக்கு விருது வழங்கினார். பின்னர் இரானி பேசியதாவது:

நான் முதன்முதலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு விண் ணப்பித்தேன். ஆனால், எனக்கு நல்ல ஆளுமை திறன் இல்லை எனக் கூறி அந்த நிறுவனம் எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

அதன் பிறகு பிரபல துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டில் வேலை கிடைத்தது. அதன் பிறகு நடந்தவை எனது வரலாறு. என்னை வேலைக்கு சேர்க்க மறுத்ததற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாடலிங் துறையில் ஈடுபட்டி ருந்த இரானி, தொலைக்காட்சி நடிகையானார். பின்னர், 38-வது வயதில்,மத்திய அமைச்சரவையில் இளம் கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.

SCROLL FOR NEXT