இந்தியா

அந்தமானில் தென்மேற்கு பருவமழை

செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழை அந் தமான்-நிகோபரில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை மைய பொது இயக்குநர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அந்தமான்-நிகோபரில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக மே 17-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்பு நேற்றே பருவமழை தொடங்கிவிட் டது. அடுத்த 72 மணி நேரங்களில் அங்கு பருவமழை தீவிரமடையும்.

கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். எனினும் அந்தமானை போன்று கேரளாவில் முன்கூட்டியே மழை பெய்யுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT