இந்தியா

நீதிபதிகள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

பிடிஐ

நீதிபதிகள் நியமன நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வலியுறுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த நீதித்துறை அலுவலர்களின் முதல் மாநாட்டில் பங்கேற்றபோது அவர் பேசிய தாவது:

நாடு முழுவதும் 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகளே பணி யாற்றும் நிலை உள்ளது. இதனால் நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. எனவே நீதித் துறையின் செயல்பாட்டை வேகப் படுத்த காலியாகவுள்ள நீதிபதி கள் பதவி களை நிரப்பும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT