இந்தியா

விளைச்சல் பெருக்கத்தினால் விலை வீழ்ச்சி: பலதரப்பு இழப்புகளைச் சந்திக்கும் விவசாயிகள்

செய்திப்பிரிவு

ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அதன் விலை உயரும், ஆனால் அப்பிரச்சனையை எதிர்கொள்ள அதை அதிகப்படியாக பயிர்செய்யும்போது ஏராளமான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

கர்நாடகாவில் தக்காளி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிவப்பு மிளகாய், மஹாராஷ்டிராவில் பருப்பு வகைகள் மற்றும் திராட்சைகள் ஆகியனவற்றுக்கு இப்பிரச்சனைகள் ஏற்பட்டன. உற்பத்தி பெருமளவில் நடக்க விலைகள் வீழ்ச்சியடைந்து விவசாயிகளின் நம்பிக்கையையும் வீழ்த்தின.

கர்நாடகாவின் கோலார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சாலையோரங்களில் தக்காளிகள் குவிக்கப்பட்டிருந்தபோது, ஒரு மாதத்திற்கு முன்பு வரைகூட கிலோ ரூ.10 லிருந்து ரூ.15 வரை இருந்த தக்காளி விலை கடந்த வாரம் கிலோ ரூ.2 என்று விலைகள் படு வீழ்ச்சியடைந்தன.

கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் வரை குவிண்டாலுக்கு தக்காளி கிடைத்ததுபோக தெலுங்கு பேசும் இரு மாநிலங்களிலும் தக்காளி நல்ல விளைச்சல் ஏற்பட்டதால் தற்போது வெறும் ரூ.2,500 ரூபாய்க்கு குறைந்தது. தெலுங்கானாவின் சில பகுதிகளில் இதனை எதிர்த்து வன்முறை எதிர்ப்புகள் வெடித்தன.

மஹாராஷ்ராவில், கடந்த ஆண்டு பயறுவகைகளின் விலை ஒரு அலையென உயர்ந்து எழுந்தது. பின்னர் பயறு விளைச்சல் 2015-16ல் 4.44 டன்கள் எனவும் 2016-17ல் 20.35 டன்கள் உற்பத்தியானது அதன் விலை மிகவும் சரிந்தது. எனவே, திராட்சைத் தோட்டங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய விலையில் சரிவு ஏற்பட்ட பிறகு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர்.

நிறைய விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு முன்பு கிடைத்த விலையைவிட தற்போது தரப்படும் மிகவும் கேவலமான விலை தருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். வேளாண்மை பொருளியலாளர்கள் தேக்கம் மற்றும் அதிக விளைச்சலினால் ஏற்படும் விலை வீழ்ச்ச்சியை 'சிக்கலான நிகழ்வு' என அழைக்கின்றனர்.

முன்பே இருக்கும் தேவை மற்றும் விலைகளை முன்னிட்டு இத்தகைய ஏராளமான பிரச்சனைக்கு வழிவகுத்தது என்று 'சிக்கலான நிகழ்வு'க்கு (cobweb phenomenon)காரணம் காட்டுகிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தின் (ISEC)முன்னாள் இயக்குநர் ஆர்.எஸ்.தேஷ்பாண்டே.

முந்தையப் பருவத்தில் பெறப்பட்ட தகுந்த விலையை ஒப்பிடும்போது அதிகப்படியான வேளாண்மை விளைபொருட்களின் விளைச்சலினால் தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மிளகாய் தரும் சோகம்

அறுவடைக்கு எட்டுமாதம் காலம்கூட பிடிக்கும் நீண்ட காலப் பயிராக தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில், சிகப்பு மிளகாய் பயிர்த் தொழில் அமைந்துள்ளது. இந்த ஆண்டை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மிளாகாயின் விலை நல்ல விலைக்கு விற்றது.

இருப்பினும், வணிக ரீதியாக வகைப்படுத்தப்பட்ட பயிருக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாத நிலையில், ஏப்ரல் முதல் வாரம் முதல் இந்த பருவத்தில் தேவை-வழங்கல் எனும் சந்தையின் அடிப்படையில் குறைந்த நிலையிலிருந்து விவசாயிக்கு கட்டுபடியாகக்கூடிய விலையேற்றம் தேவைப்படுகிறது.

ஒரு மூத்த தெலங்கானா வேளாண்மைத் துறை அலுவலர் தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறும்போது, உயர்தர சிகப்பு மிளகாய் கடந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.13 ஆயிரம் கிடைத்தது. விவசாய சமுதாயம் இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக நல்ல வருமானம் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தனர், என்றார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், மத்திய அரசு, சந்தை கொள்முதல் திட்டத்தின்மூலம் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்மூலம் தெலுங்கானாவில் ஒட்டுமொத்தமாக விளையும் 7 லட்சம் டன்னிலிருந்து 33,700 டன்களை மட்டும் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரம் என்ற ஆதரவு விலையிலும் இதர செலவினங்களுக்காக குவிண்டாலுக்கு ரூ.1,250 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திராட்சையை தேர்ந்தெடுத்த சிலர்

திராட்சை விலைகளின் விபத்து, மகாராஷ்டிராவில் உள்ள திராட்சைத் தோட்ட உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை மட்டும் உறிஞ்சவில்லை, கடந்த குறைந்தபட்சம் இரண்டு விவசாயிகளின் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.

நாசிக்கைச் சேர்ந்த 36 வயதான மானிக் ராண்டிவ் மற்றும் 25 வயதான சேதன் வசல் ஆகியோரின் தற்கொலை, தங்களுக்கு கிடைத்த திராட்சைக்கு நேர்ந்த விலைவீழ்ச்சியே இதற்குக் காரணம்.

விலையுயர்ந்த திராட்சை உற்பத்தி இருந்தபோதிலும், விலைகள் சரிந்ததால் சில தேர்வாளர்கள் இருந்தனர். படி இந்தியாவின் காய்கறி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவரான ஸ்ரீராம் காதேவ், வைன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

அவரைப் பொறுத்தவரை, தோட்டத்திலிருந்து மொத்த விற்பனையாளர்களும் மது தயாரிப்பவர்களும் கடந்த ஆண்டு ஏப்ரலில் 95 சதவீதத்திற்கும் அதிகமான திராட்சை அறுவடையைப் பறித்துக்கொண்டனர். விவசாயிகளும் நாகரிகமான விலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40-42 எனப் பெற்றனர். இந்த ஆண்டு அதில் 75 சதவீதம்கூட கிடைக்காதவகையில் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.8 என அற்பமான விலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

துவரம் பருப்பின் விலை பாதிப்பு

துவரம் பருப்புக்கு சென்ற ஆண்டு விண்ணைத் தொடும் விலை இருந்தது. பெரிய அளவில் உற்பத்தியைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதன் தேவையை ஒரு துளியளவு பாதித்துள்ளது. மஹாராஷ்டிராவில், துவரம் பருப்பின் விலை கடந்த ஆண்டு 4.4 லட்சம் டன்கள் என இருந்தது. நடப்பு ஆண்டான 2016-17-ல் 20.35 லட்சம் டன் வரை உற்பத்தி பெருகியதால் மிகப்பெரிய விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் தனது முகவர்களின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,050 என்று கிட்டத்தட்ட 4 லட்சம் டன்களையே கொள்முதல் செய்தனர். ஆனால் மீதமுள்ள 5 லட்சம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விற்றனர். பல லட்சம் டன்கள் விற்கப்படாமலேயே எஞ்சியது.

ஆனால் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில்கூட சில விவசாயிகள் அரிதாகத்தான் பயன்பெறுகிறார்கள். உதாரணமாக கடந்த ஆண்டு துவரம் பருப்பு, ஒரு நுகர்வோர் ஒரு கிலோவுக்கு ரூ.220 பணம் கொடுத்து வாங்கினாலும் கூட, அதன் பண்ணைவாயில் விலை வெறும் ரூ.45 லிருந்து ரூ.50 வரைதான் என்கிறார் டாக்டர் தேஷ்பாண்டே. ''பண்ணையிலிருந்து வரும் பருப்பு, சமையலுக்கு உகந்த பருப்பாக மாற ரூ.170 எடுத்துக்கொள்கிறதா?'' என்று வியக்கிறார்.

டாக்டர் தேஷ்பாண்டே இந்த 'சிக்கலான நிகழ்வை'யே எதிரொலிக்கிறார். மைசூருவுக்கு அருகிலுள்ள டி.நர்சிபுரத்தைச் சேர்ந்த திரு.ஸ்ரீனிவாஸ் முன்னேறிவரும் ஒரு விவசாயி, தான் தக்காளி பயிரிடுதலைக் கைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். ஒரு நல்ல விலையை உணர்ந்த பிறகு இந்த ஆண்டு பல விவசாயிகளும் பயிரிடத் தொடங்குவர் என்றார்.

(மைசூருவில் லாய்க் ஏ கான், ஹைதராபாத் பி சந்திரசேகர், புனேவில் ஷாமோஜித் பானர்ஜி, மும்பையில் அலோக் தேஷ்பாண்டே ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்)

தமிழில் : பால்நிலவன்

SCROLL FOR NEXT