இந்தியா

வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் இழப்பீடு: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3.5 லட்சம் இழப்பீடு வழங் கப்படும் என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

மேலும் ஜம்மு பகுதிக்கு ரூ. 200 கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளை இழந்தவர்கள் மறுகட்டுமானம் செய்வதற்காக முதல்கட்ட நிதியாக ரூ. 75,000 வழங் கப்படும் எனவும் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு 50 கிலோ அரிசி உள்பட இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக அதிகாரிகள் மக்களிடம் எவ்வித ஆவணங்களையும் கோரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அப்துல் ரஹிம் ராதர் தலைமையில் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழு பிரதமர் மோடியைச் சந்திக்க அனுப்பப் பட்டுள்ளது.

அக்குழு, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் விளக்கும் என்றார்.

துல்லியமான விவரம் இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரிலிருந்து ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவால் இதுவரை 1.30 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.காஷ்மீரில் 400 கிராமங்கள் மிக ஆழமாக தண்ணீரில் மூழ்கியுள் ளன.

ஸ்ரீநகரில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் வெள்ளத்தில் சிக்கி யுள்ளனர். ஆகவே, துல்லியமான எண்ணிக்கையைத் தர இயலாது. நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறோம். பிரிவினை வாதிகள் பிரச்சினையை நாங்கள் பார்க்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் செய்கிறோம். அது எவ்வளவு கடினமான பணி யாக இருந்தாலும் சரி. மீட்புப் பணிகள் தொடரும் என்றார்.

பிரிவினைவாதிகள் சிலர் மீட்புக் குழுவினர் மீது கற்களைக் கொண்டு தாக்கும்படி மக்களை தூண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT