இந்தியா

கர்நாடக ஆளுநராக வஜுபாய் பதவியேற்பு: முதல்வர் சித்தராமய்யா அதிருப்தி

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக குஜராத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் வஜூபாய் வாலா(76) திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

வஜூபாய் நியமனம் குறித்து தன்னிடம் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜின் பதவிக்காலம் கடந்த ஜூன் 28-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுந‌ர் ரோசய்யா கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பிரதமர் மோடிக்கு நெருங்கியவருமான வஜூபாய் வாலா கர்நாடக ஆளுநராக கடந்த 26-ம் தேதி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா வ‌ஜூபாய் வாலாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவர் கர்நாடக மாநில‌த்தின் 18-வது ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பேசிய கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா,''அரசியல் சார்புகளைக் கடந்து நேர்மையான ஆளுநராக செயல்படுவேன்''என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT