பத்து நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்ட இன்று (வியழக்கிழமை) பத்து நாள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் நாளை நடக்க இருக்கும் ஐ. நா. பொதுகூட்டத்தில் பங்கேற்கும் அவர், அமெரிக்காவில் பிரதமர் மோடியின் பங்கேற்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
மேலும், இந்த பயணதில் பிரிட்டன், மாலத்தீவு உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தகள் ரீதியிலான சந்திப்புகளை அவர் அடுத்தடுத்து மேற்கொள்கிறார்.