இந்தியா

ஹனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த பிரம்மோற்சவ விழாவில், நாட்டிலுள்ள பல்வேறு மாநில பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில், 6ம் நாளான நேற்று காலை, ஹனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி, ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாலை, தங்கத்தேரில், தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளான பக்தர்கள் பங்கேற்று பக்த கோஷமிட்டு வழிபட்டனர்.

தங்க ரதத்தை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டுமென்ப தால், நேற்று திரளான பெண் பக்தர்கள் தங்கத்தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள், தேரின் மீது மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து, நேற்றிரவு யானை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை வாகன சேவைகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT