காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்துள்ளதால் தனது வெளிநாட்டுப் பயணத்தை ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் ரத்து செய்துள்ளார்.
ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் செவ்வாய்க்கிழமை பூட்டான் செல்வதாக இருந்தது. 4 நாட்களுக்கு அவரது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், எல்லையில் ஊடுருவிய சீன மக்கள் விடுதலைப் படையினர் அங்கேயே முகாம் இட்டுள்ளனர். 12 நாட்களாகியும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக தெரியவில்லை.
இதனையடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் ரத்து செய்துள்ளார். எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.