பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் 20 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் இத்திட்டத்தில் சேர்ந் தவர்களின் எண்ணிக்கை 32.61 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஜன்தன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங் களை மத்திய அரசு மேற் கொண்டது. இதன்படி இத்திட்ட பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப் பட்டது. அத்துடன் ஓவர் டிராப்ட் (ஓடி) வசதியும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி வரையான நிலவரப்படி 20 லட்சம் பேர் புதிதாக இணைந் துள்ளதாக நிதி அமைச்சகம் தெரி வித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிற கும் இத்திட்டம் தொடர வழி ஏற் படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்பங்களும், உறுப்பினர்களும் இத்திட்டத்தின் பலனைப் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5-ம் தேதி நிலவரப் படி இத்திட்டத்தில் இணைந்துள் ளவர்களின் எண்ணிக்கை 32.61 கோடியாகும். இந்தக் கணக்குகளில் ஆகஸ்ட் 15-செப்டம்பர் 5 வரையில் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூ. 1,266.43 கோடியாகும். பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் போடப்பட்ட தொகை மொத்தமாக செப்டம்பர் 5ம் தேதி நிலவரப்படி ரூ. 82,490.98 கோடியாகும்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக காப்பீடு வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூபே கார்டு வைத்துள் ளவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத் தில் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகும் சேரலாம் என தெரிவிக்கப் பட்டது.
அதேபோல பயனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை ஓவர் டிராப் வசதி அளிக்கப்பட்டது. இது தற்போது ரூ. 10 ஆயிரமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரம் வரையான ஓடி வசதிக்கு எந்த நிபந்தனையும் கிடையாது.
ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 7.18 லட்சம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். இவர்களுக் கான விபத்து காப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங் களுக்குப் பிறகு ஓடி வசதி ரூ. 5 ஆயிரத்துக்கு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 15, 2018-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள உறுப்பி னர்களில் 53 சதவீதம் பேர் பெண் களாவர். இவற்றில் 83 சதவீத கணக்குகள் ஆதார் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.