சமையல் எரிவாயு, மண்ணெண் ணைக்கான மானியத் தொகையை பயனாளிகளுக்கு மீண்டும் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட் ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
ஏழை மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதியை ஏற்படுத் தும் ‘ஜன் தன்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத் தின் மூலம் எங்கள் துறைக்கு அதிக பலன் கிடைக்க உள்ளது.
அதாவது, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கான மானியத்தை தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஜன் தன் திட்டம் பேருத வியாக இருக்கும். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 16 கோடி நுகர்வோர் பயனடைவர்.
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் தொடரும். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டீசல் விலையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
வங்கிக் கணக்குகள் மூலமாக எரிபொருள் மானியம் அளிக்கும் திட்டம் கடந்த ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப் போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, சில திருத்தங்களுடன் அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.