இந்தியா

சுஷ்மாவின் பாதையை பின்பற்றுவதில் பெருமைக் கொள்கிறேன்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

செய்திப்பிரிவு

சுஷ்மாவின் பாதைகளை பின்பற்றுவதில் பெருமைக் கொள்கிறேன் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவருக்கு வெளியுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அவரது தேர்வை கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘‘ இது எனது முதல் ட்வீட். உங்களுடைய அனைவரது வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த பொறுப்பு  எனக்கு அளிக்கப்பட்டதை கவுரவமாக எண்ணுகிறேன். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜின் பாதைகளை பின்பற்றுவதில் பெருமைக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT