இந்தியா

ஜம்மு-காஷ்மீர் வெள்ள சேதம் ரூ. 1 லட்சம் கோடி

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் முகமது இக்பால் காந்தே கூறியதாவது: வெள்ளத்தால் தனியார் வர்த்தகம் உட்பட மொத்த சேதம் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி யுள்ளது. இதுதொடர்பான விரி வான அறிக்கையைத் தயாரித்து வருகிறோம். இவ்வார இறுதிக்குள் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் 3.50 லட்சம் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளன. தோட்டக் கலைத்துறையில் ரூ.1,568 கோடி உட்பட ரூ.5,611 கோடி மதிப்பிலான பயிர்கள் அழிந்து விட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான கறவை மாடுகள், 33 ஆயிரம் ஆடு கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. சுற்றுலா உட்கட்டமைப்புகள், அரசு தங்கும் குடியிருப்புகள் ரூ.5,000 கோடி மதிப்புக்கு சேத மடைந் துள்ளன. இவை அனைத்துமே முதல் கட்ட மதிப்பீடுகள்தான். விரிவான சேத மதிப்புகளைக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, இக்பால் காந்தே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT