இந்தியா

யோகி ஆதித்யநாத் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆட்சேபணைக்குரிய பதிவுகள்: லக்னோ பத்திரிகையாளர் கைது

பிடிஐ

உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் 'ஆட்சேபணைக்குரிய' பதிவுகளை வெளியிட்டதாக லக்னோவில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த விவரம்:

முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண், அங்கு கூடியுள்ள செய்தியாளர்களிடம், தான் முதல்வரை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பிரஷாந்த் கனோஜியா என்பவர் வெளியிட்டுள்ளார். 

நேற்றிரவு வெளியான இப்பதிவு முதல்வரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்பட்டது. எனவே, ஆட்சேபணைக்குரிய' கருத்துக்களை பதிவேற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்மீது ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலைய உதவி ஆய்வாளர் எப்ஐஆர் வழக்கும் பதிவு செய்துள்ளார்.

கனோஜ்யாவின் ட்விட்டர் அவருக்கு சொந்தமானதுதானா என சரிபார்க்கப்பட்டது. @PJkanojia ஐஐஎம்சி மற்றும் மும்பை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு சில ஊடகங்களின் தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT