இந்தியா

அரசை கேள்விகேட்பதைவிட்டு, எதிர்க்கட்சிகளை கேட்கிறார்கள்: ஊடகங்களை சாடிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

பிடிஐ

ஆளும் அரசை கேள்வி கேட்பதை விடுத்து, எதிர்க்கட்சிகளைத்தான் ஊடகங்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரெய்ஷி சாடினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து புதிய அரசு அமைந்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, ஊடகங்களின் பங்கு ஆகியவை குறித்து தனியார் ஆய்வு நிறுவனம் சார்பில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி பங்கேற்றார். அப்போது தேர்தல் செலவுகள் குறித்து அவர் பேசியதாவது:

பொதுவாக ஊடகங்களின் பங்கு, செயல்பாடு ஆளும் அரசின் செயல்பாடுகளை கேள்விகேட்பதுதான். நீங்கள் மக்களுக்கு என்ன செய்து வருகிறீர்கள், இதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்பதுண்டு.

ஆனால் இன்று தலைகீழாகச் சென்று எதிர்க்கட்சிகளைத்தான் ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் எதற்காக எதிர்க்கட்சிகள் ஏன் இதை செய்யவில்லை என்று கேட்கிறார்கள். இதுதான் ஊடங்கள் செய்யவேண்டிய பணியா.

ஆனால், தேன் போன்ற வார்த்தைகளை எளிதாக பேசி சில தலைவர்கள் மழுப்பிவிடுகிறார்கள். . அவர்களிடம் கடினமான கேள்வி கேட்டு பதில் பெற நினைத்தால் அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

2019-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஊடகங்களின் செயல்பாடு பிரச்சினைகுரியதாக, திருப்தியில்லாத வகையில் இருக்கிறது, கேள்விக்குரியவகையில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் 48 மணிநேரம் கட்சியினர் குறித்தும் தேர்தல் குறித்தும் பதிவிடக்கூடாது எனும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

ஏனென்றால், இந்த தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டது, ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியில் தேர்தல் நடக்கும்போது அங்கு தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். மற்றொரு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும். தேர்தலுக்காக மற்ற பகுதிகளையும் ஒதுக்கிவைப்பது சாத்தியமில்லாதது.

அவ்வாறு இருக்கும் போது, ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில்தான் பலர் வெளிப்பட்டார்கள். பல்வேறு தலைவர்களின் தேர்தல் பேச்சுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தன.   ஊடகங்கள் தங்களின் கண்களையும், காதுகளையும் திறந்துவைத்து விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு குரெய்ஷி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT