இந்தியா

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33.33 சதவீதம் இட ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 33.33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான சனிக்கிழமை முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியில்தான் பிற்படுத்தப் பட்டோர் வளர்ச்சி அடைந்தனர். தற்போது பின் தங்கிய சமூகத்தி னருக்கு 33.33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் களுக்கு பதவி உயர்விலும் 33.33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப் படும்.

இதேபோன்று கைவினை தொழிலாளர்கள் மரணமடைந்தால் ரூ. 5 லட்சமும் காயமடைந்தால் ரூ. 1 லட்சமும் வழங்கப்படும். படகில் மீன் பிடிக்கும் தொழி லுக்கு டீசலுக்காக மானியம் வழங்கப் படும். இவ்வாறு முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர பட்ஜெட் கூட்டத் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடைபெற் றது. இதில் மொத்தம் 60.37 நிமிடங்கள் சபை நடைபெற்றது. 5 மசோதாக்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 41 உறுப்பி னர்கள் கேட்ட 117 கேள்விகளுக்கு அரசு பதில் அளித்துள்ளதாக சபாநாயகர் கோடெல்ல சிவபிரசாத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT