இந்தியா

மக்களவைக் கூட்டத்தொடர் தொடங்கியது: பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் எம்.பி.யாக பதவியேற்பு

செய்திப்பிரிவு

17-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மோடி உட்பட புதிய எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. முன்னதாக மக்களவை இடைக்கால தலைவர் வீரேந்திர குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து  வைத்தார்.

இதைத்தொடர்ந்து 17-வது மக்களவை இன்று காலை முறைப்படி தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வைருகிறார்.

இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய எம்.பி.க்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT