இந்தியா

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: மம்தா

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடை பெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் மம்தா இதனைத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்த இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியது:

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். ஏனெனில் மத்தியில் ஒரே குடும்பத்தின் ஆட்சியும் தேவையில்லை.வன்முறையாளர்க ளின் ஆட்சியும் தேவை யில்லை. மக்களின் ஆட்சிதான் தேவை.

தேர்தலுக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்களுக்கு இங்கு ஒன்றை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் .

அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் களுடனும் கூட்டணி கிடையாது என்று கூறிய அவர், பிராந்திய கட்சிகளின் கூட்டணி ஆட்சியே மத்தியில் அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

அப்போதுதான் அனைத்து மாநிலங்களின் நலனும் காக்கப்படும். தேர்தலுக்குப் பின் மாநிலக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் திரிணமூல் காங்கிரஸ் அதற்கு ஆதரவளிக்கும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி எங்க ளுக்கு இல்லை. அனைத்து கட்சிகளுக்கும் மாற்றாக இருப்பது திரிணமூல் காங்கிரஸ்தான். எதிர்காலத்தில் மேற்கு வங்கம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT