இந்தியா

ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது குற்றப்பத்திரிகை

என்.மகேஷ் குமார்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜெகன் சுமார் 6 மாதங்கள் சிறைவாசம் அனுப வித்தார். பின்னர் ஜாமீனில் வெளியாகி வழக்குகளை சந்தித்து வருகிறார். இவ்வழக்கில் இதுவரை 10 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 11-வது குற்றப்பத்திரிகை செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத்தில் இந்து வீடு கட்டும் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக அந்நிறுவனம் ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனத்தில் ரூ. 70 கோடி முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் ஜெகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள் ளார். இவரைத் தவிர மேலும் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர்.

SCROLL FOR NEXT