பாஜகவில் இணைந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 4 பேரும் இனிமேல் பாஜக எம்.பி.க்கள் என அங்கீகரித்து மாநிலங்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சவுத்ரியும் அடங்குவார். இதனால் மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்தது.
வெங்கடேஷ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தவர்.
இந்தநிலையில் பாஜகவில் சேர்ந்த அவர்கள் தங்களை பாஜக எம்.பி.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனு அளித்து இருந்தனர். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் பாஜக எம்.பி.க்களாக அங்கீகரித்து மாநிலங்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசத்தில் இருந்து பாஜகவில் இணைந்த 4 எம்.பி.க்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.