இந்தியா

கர்நாடகாவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; நால்வர் படுகாயம்

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் வீடொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை கலபுர்கி பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:

கர்நாடாகாவின் கலபுர்கி பகுதியில் மங்கல்கி கிராமம் உள்ளது. இங்கு அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் 7 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் மீது இடிபாடுகள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT