இந்தியா

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்ட கால பங்களிப்பை நினைவு கூர்வதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்ட கால பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கலை காலத்தால் அழியாதது. என்றும் அவர் நினைவைவிட்டு நீங்க மாட்டார்" என குறிப்பிட்டுள்ளார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இறந்தார். அவருக்கு வயது 45.

SCROLL FOR NEXT