இந்தியா

தமிழக போலீஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையுடன் டெல்லியில் சுற்றித் திரிந்தவர் கைது

ஏஎன்ஐ

தமிழக போலீஸ் உயர் அதிகாரி என சொல்லிக் கொண்டு போலி அடையாள அட்டையுடன் டெல்லியில் சுற்றித் திரிந்த நபரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி ஹவுஸ் காஸி பகுதியில் உள்ள சீதா ராம் பஜார் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.

அவர் குறித்து போலீஸுக்கு தகவல் கிடைக்க அவரைப் பிடித்து டெல்லி போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தனது பெயர் ராஜீவ் குப்தா, வயது 53, 1989-ல் ஐபிஎஸ் முடித்தவர். தற்போது. தமிழக காவல்துறையில் ஐஜியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

உடனே அவரது அடையாள அட்டையை டெல்லி போலீஸார் சோதித்துள்ளனர். அது போலி எனத் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 170-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT