இந்தியா

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: ஈரான் வான்வெளியை தவிர்க்க இந்திய விமானப்போக்குவரத்து தலைமை இயக்குனரகம் முடிவு

பிடிஐ

ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே பதற்றம் அதிகரித்ததன் காரணமாக இந்திய விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்க்கும் முடிவை இந்திய வான்வழிப்போக்குவரத்து தலைமை இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வான்வழிப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அமெரிக்க விமானங்கள் டெஹ்ரான் விமானத் தகவல் பகுதிக்குள் பறக்க வேண்டாம் என்று நோட்டீஸ் டு ஏர்மென் தடை உத்தரவு பிறப்பித்தது. காரணம் உச்சபட்ச ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதிகரிக்கும் அரசியல் பதற்றங்கள் என்று அந்த நோட்டீஸ் டு ஏர்மெனில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய விமானப்போக்குவரத்து தலைமை இயக்குனரகமான டிஜிசிஏ ஈரானிய வான்வெளியைத் தவிர்க்க முடிவெடுத்துள்ளது. அதாவது பயணிகள் பாதுகாப்பு உத்தரவாதத்திற்காக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொருத்தமான மாற்றுப்பாதை அறிவிக்கப்படும் என்று டிஜிசிஏ தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து பயணிகள் விமானமும் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்று பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து முக்கிய விமானச் சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்களை மாற்றுப்பாதையில் ஏற்கெனவே இயக்கத் தொடங்கிவிட்டன.

SCROLL FOR NEXT