இந்தியா

தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன் - பிரதாப் சந்திர சாரங்கி

செய்திப்பிரிவு

தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அவை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்றும்  மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் 24 கேபினட் அமைச்சர்களும் 9 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இவர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்.

இதில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் 56-வது நபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதாப் சந்திர சாரங்கிக்கு விருந்தினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பிரதாப் சந்திர சாரங்கி எளிமையான வாழ்வியல் முறையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டின.

இந்த நிலையில் ஒடிசாவில் 2002 வலது சாரிகள் நடத்திய தாக்குதல் மற்றும் பாதிரியார் எரிப்பு சம்பவத்தில் இவருக்கு தொடர்ப்பு இருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்திருக்கிறார் பிரதாப் சந்திர சாரங்கி.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது,”என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்.

சமூகத்தில் நடந்த  அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார்.

சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT